ஏரியில் நண்பர்களுடன் குளித்த பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

Author: kavin kumar
13 August 2021, 6:54 pm
Quick Share

திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் படகில் சென்று தனது நண்பர்களுடன் குளித்த போது பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரது மகன் லலித் குமார். இவர் அவரது நண்பர்கள் பிரித்திவிராஜ், ஆகாஷ் உள்ளிட்ட7 பேருடன் தடைசெய்யப்பட்ட படகுபயணம் மேற்கொண்டபோது கடலும் ஏரியும் இணையும் முகத்துவாரம் பகுதியில் உள்ள மணல் திட்டில் ஏழு பேரும் இறங்கி குளித்த போது லலித் குமார் என்பவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பொன்னேரி தீயணைப்புத்துறை வீரர்கள் அவரது உடலை தேடி மீட்டனர்.

பின்னர் உடன் வந்த ஆறு பேரையும் பத்திரமாக மீட்டனர். லலித் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழவேற்காடு ஏரியில் காவல்துறை அதிகாரிகள் உரிய முறையில் தடை செய்யப்பட்ட படகுப் பயணத்தை தடுக்காததே இதுபோன்று அடிக்கடி உயிரிழப்புகளுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Views: - 145

0

0