பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம்: டியூசன் ஆசிரியருக்கு 10 ஆண்டும் சிறை

Author: kavin kumar
11 August 2021, 4:31 pm
Quick Share

புதுச்சேரி: பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியருக்கு, புதுச்சேரி நீதிமன்றம் 10 ஆண்டும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது

புதுச்சேரி மேட்டுபாளையம் சண்முகாபுரம் நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித் (எ) ரஞ்சித்குமார், 27; டியூசன் சென்டர் நடத்தி வந்தார், இவரது டியூசன் சென்டருக்கு வந்த (அப்போது) 10ம் வகுப்பு பயிலும், 16 வயது சிறுமியை ரஞ்சித் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம், ரஞ்சித் மீது போக்சோ, பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் பிரிவின் கீழ் மேட்டுப்பாளையம் போலிசார் வழக்கு பதிந்து ரஞ்சித்தை கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர், இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு,

கடந்த 3 ஆண்டுகளாக புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட டியூசன் ஆசிரியர் ரஞ்சித், போக்சோ பிரிவின் கீழ் 10 ஆண்டுகள், பலாத்காரம் பிரிவின் கீழ் 7 ஆண்டுகள், கொலை மிரட்டல் பிரிவின் கீழ் ஒராண்டு சிறை தண்டனையை விதித்து, சிறப்பு நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழக்கினார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு ரூ. 4 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அரசு சிறப்பு வழக்கறிஞர் பாலமுருகன், விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்இன்ஸ்பெக்டர் குமார் ஆஜராகினர்.

Views: - 458

0

0