வைத்தீஸ்வரன்கோயிலில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் கொண்ட ரவுடி கும்பல் வெறிசெயல்

Author: Udayaraman
26 July 2021, 10:57 pm
Quick Share

மயிலாடுதுறை: சீர்காழி அருகே மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் ரவுடியை கும்பல் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மண்ணிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தம்பிதுரை மகன் ரவுடி அருண்(35).இந்நிலையில் அருண் வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் கடைக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட ரவுடி கும்பல் அருணை அரிவாளால் தலை மற்றும் கால்,கைகளில் வெட்டி விட்டு தப்பியுள்ளனர். இரத்தவெள்ளத்தில் சரிந்த கீழே விழுந்த அருண் குறித்து அருகில் இருந்தவர்கள் வைத்தீஸ்வரன்கோயில் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தவகலறிந்துவந்த போலீசார் அருணை மீட்டு சிகிச்சைகாக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 150

0

0