பாதை பிரச்சினையில் அண்ணன் தம்பிக்கு அரிவாள் வெட்டு: குற்றவாளிக்கு வலை

Author: kavin kumar
1 October 2021, 1:56 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பாதை பிரச்சினையில் அண்ணன் தம்பிக்கு அரிவாளால் வெட்டிய நபர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுமலை தெண் மலைப்பகுதி உள்ள மீனாட்சிபுரம். இப்பகுதியில் கணேசன் ,பெருமாள் என்பவருக்கு தோட்டம் உள்ளது. இதன் அருகிலேயே (லேட்)முனியாண்டி மகன் கண்ணன் என்பவருக்கும் தோட்டம் உள்ளது. இந்நிலையில் இரு தோட்டங்களுக்கு இடையே பாதையின் நடுவே மரம் உள்ளது . மரத்தை எடுத்தால் மட்டுமே பாதையை பயன்படுத்தலாம் எனக்கூறி பெரும் மாளும் அவரது சகோதரர் கணேசனும் கண்ணனிடம் பேசியுள்ளனர். கண்ணன் மற்றும் அவரது சகோதரர்களுக்கும் பெருமான் மட்டும் கணேசனுக்கும் பாதை இல்லை மரத்தை எடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனை தொடர்பாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சோழவந்தானை சேர்ந்த திமுக பிரமுகர்கள் சிவா மற்றும் சூரி ஆகியோர் கணேசனின் அவரது சகோதரர் பெருமாளையும் கண்ணன் சார்பாக மிரட்டியுள்ளனர். உடனடியாக தோட்டத்தை விட்டு விட்டு செல்ல வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதன் பிறகு இன்று (லேட்)முனியாண்டி மகன் கண்ணன் மற்றும் கூலிப்படையினர் சேர்ந்த கணேசன் மற்றும் அவரது சகோதரரான பெருமாளை கூர்மையான ஆயுதங்களால் வெட்டி உள்ளனர் .இதில் படுகாயமடைந்த இருவரும் தற்போது திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 205

0

0