குட்கா பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்: 23 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்

Author: Udhayakumar Raman
23 July 2021, 7:57 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல் வைத்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சங்கராபுரம் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமையில், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் புதுப்பாலப்பட்டு கிராமத்தில் MR எனும் மளிகை கடை ஒன்றில் நடத்திய சோதனையில் 10 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து குட்கா பான்மசாலாவை போலிசார் பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் சுபாஷ் என்பவரை கைது செய்தனர். உடனடியாக வருவாய் துறையினர் மூலமாக அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. அதேபோல் சங்கராபுரம் நகர் பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் லஷ்மி மளிகை கடையில் 9 கிலோ தடை செய்யப்பட்ட குட்காவும், குருநாதன் எனும் மளிகை கடையில் நடத்தப்பட்ட சோதனையில் 4கிலோ குட்காவும் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அதன் உரிமையாளர்கள், பிரபாகரன் மற்றும் குருநாதன் ஆகிய இருவரையும் சங்கராபுரம் போலிசார் கைது செய்தனர். பின்னர் வருவாய் துறையினர் இரண்டு காடைக்களுக்கும் சீல் வைத்தனர். இன்று ஒரே நாளில் இரண்டு இடங்களில் திடீரென நடத்தப்பட்ட சோதனையில் 23கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது, 3 கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டனர். மேலும் வருவாய்த்துறையினர் 3 கடைகளுக்கு சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.

Views: - 169

0

0