கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத காட்டேஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சீல்: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

14 January 2021, 2:08 pm
Quick Share

நீலகிரி: தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாத் தலங்களுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவர் தனியார் காட்டேஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் வகையில் செயல்பட வேண்டுமெனவும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் துறை சார்பில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது ஏராளமான சுற்றுலா பயணிகள் இதை கண்டு ரசித்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்தில் அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு குடும்பத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடினார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவைக் கொண்டாடும் விதமாக சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகமானது பொங்கல் விழாவை கொண்டாடும் அதன் ஒரு பகுதியாக இன்றும் இந்த பொங்கல் விழாவானது உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கொண்டாடப்படுவதாக தெரிவித்தார்.

தொடர் விடுமுறை காரணமாக இம்மாவட்டத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வரக்கூடும் எனவே கொரோணா கட்டுப்பாடுகள் தற்போது வரை இருந்து வரும் நிலையில் கட்டாய முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சுற்றுலா பயணிகளுக்கு இதை எடுத்துரைக்க வேண்டும் தவறும் பட்சத்தில் கடைகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Views: - 6

0

0