வேட்பாளர்களை அறிமுக படுத்திய சீமான்…! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என பேட்டி…!!

Author: kavin kumar
30 September 2021, 5:31 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்றும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தான் எப்போதும் தேர்தல் நடக்கிறது எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் குறிச்சி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான், உள்ளாட்சித் தேர்தலின் போது நாம் தமிழர் சார்பில் அளிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தான் எப்போதும் தேர்தல் நடக்கிறது எனவும், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதே நாம் தமிழன் கோரிக்கையாக இருக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு தேவை இல்லை என்பதில் நாம் தமிழர் என்றும் குறிக்கோளாக இருக்கிறது எனவும் தேர்வு ஒன்று தான் மாணவர்களை தேர்வு படுமாயின் அந்த தேர்வு தேவை இல்லை எனவும், தமிழகத்தில் சுங்க சாவடிகள் இருப்பது மக்களை சாவடிக்கும் திட்டம் என தெரிவித்தார்.

Views: - 99

0

0