” விதை பரிமாற்றம்” விவசாய உலகில் ஒரு புரட்சி: பண்டைய கால விவசாயத்திற்கு மாறும் நவின கால விவசாயிகள்…

Author: Udhayakumar Raman
25 July 2021, 1:31 pm
Quick Share

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியை ஒட்டிய காளம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். ஓய்வு பெற்ற வங்கி மேலாளாரான இவர் இயற்க்கை விவசாயத்தில் மேல் உள்ள அபரிதமான பற்றால் தன் வீட்டை விற்று 5 ஏக்கர் நிலத்தை வாங்கி அதற்கு “அறிவு தோட்டம்” என பெயரிட்டு அதில் சிறிது கூட இராசாயனம் பயன்படுத்தாமல் பாரம்பரிய இயற்க்கைமுறையில் விவசாயம் செய்தும், தான் செய்யும் விவசாயத்தை தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சொல்லி கொடுத்து அமைதியான முறையில் பசுமை புரட்சி செய்து வருகிறார். தமிழனின் உணவே மருந்து என்ற வகையில் விளைவிக்கப்பட்டு, இப்போது கார்ப்ரேட் கம்பெனிகளால் அழிக்கபட்ட நெல் வகைகளான, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, சொர்ன முசிரி, கருப்பு கவுனி, மூங்கில் அரிசி, யானைகவுனி, பூங்கார்,

துாய மல்லி மற்றும் சேலம் சென்னா – என 50-க்கும் மேற்ப்பட்ட முற்றிலும் அழிந்து போனநெல்வகைகளை கடினப்பட்டு மீண்டும் உற்பத்தி செய்து அவற்றை தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கி கடந்த மூன்று வருடங்களாக பசுமை புரட்சி செய்து வருகிறார். மேலும் ஒவ்வொறு மாதமும் இவரிடம் விதை வாங்கி சென்ற 100-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகளை ஒன்று சேர்த்து அவர் அவர்கள் விளை வித்த அபூர்வ வகை நெல் வகைகளை “விதை பரிமாற்றம்” என்று ஒருவருக்கு ஒருவர் விதைகளை பறிமாற்றம் செய்து இன்று டன் கணக்கில் இந்த அபுர்வ வகைநெல் வகைகளை உற்பத்தி செய்து இந்த விவசாயிகள் சாதனை படைத்து உள்ளனர். இன்று நடந்த விதை பறிமாற்று நிகழ்ச்சியில் ஆண் விவசாயிகள் மட்டுமல்லாது பெண் விவசாயிகளும் கலந்து கொண்டு, அபூர்வ வகை விதைகளை பரிமாற்றம் செய்து கொண்டனர்.

இதே போன்று குறைந்த செலவில் அதிக மகசூல் தரும் ( இயற்கை விவசாயத்தில்) காய், கனி, தோட்ட பயிர்கள் என்றழைக்கப்படும் அவரை, சுரை, பூசனி, கத்தரி மற்றும் தக்காளி விதைகளும் பறிமாற்றம் செய்யப்பட்டது. மேலும் விவசாய கழிவு பொருட்களை எப்படி விற்பனை பொருட்களாக மாற்றுவது என்பது கூறித்தும் விளக்கப்பட்டது. அதில் தேங்காய் ஓட்டை பயன்படுத்தி டீ கப், சாம்பார் கரண்டி (அகப்பை) -போன்றவைகளை செய்து லாபம் பார்த்து, இயற்கை விவசாயத்தில் இராசாயன பயிற்களை விட இயற்கை விவசாயத்தில் அதிக பொருள் ஈட்டலாம் என்று நிருபிக்கப்பட்டது. இந்நிலை தொடர்ந்தால் இயற்கை விவசாயத்தில் இந்தியாவிற்க்கு வேலூர் மாவட்டம் முன் உதாரனமாக விளங்கும் என்பது உண்மையிலும் உன்மை.

Views: - 431

0

0