சீதாப்பழம் விளைச்சல் அமோகம்: விலை வீழ்ச்சியாள் வியாபாரிகள் கவலை

2 November 2020, 2:52 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு சீதாபழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால், அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெகதேவி, வேப்பனஹள்ளி, போச்சம்பள்ளி, குருவினாயனப்பள்ளி, காளிக்கோவில், வரட்டனப்பள்ளி, தொகரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மலை சார்ந்த வனப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான சீதாப்பழ மரங்கள் உள்ளன.இந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு சீதாப்பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதங்களில் சீதாப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. வனப்பகுதிகளை ஒட்டி வாழும் இருளர் பழங்குடி மக்கள், சீதாப் பழங்களை அறுவடை செய்து, அருகில் உள்ள மண்டிகளில் விற்பனை செய்கின்றனர்.

மலைவாழ் மக்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் சீதா பழங்களை தரம் வாரியாக பிரித்து, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு, லாரிகள் மூலமாக நாள்தோறும் சுமார் 3 டன் அளவுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால், 20 கிலோ எடை கொண்ட பெட்டி ஒன்று 200 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை கடந்த ஆண்டு 400 ரூபாயாக இருந்தது. இப்பொழுது விலை பாதி அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

சீதா பழத்திற்கு அதிகளவில் மருத்துவ குணம் இருப்பதாக கூறப்படுவதாலும், விலையும் வீச்சியடைந்து இருப்பதாலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் ஆர்வத்துடன் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சீதாபழத்தின் விற்பனை அதிகரித்து உள்ளது.

Views: - 21

0

0