வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

19 September 2020, 6:12 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் வெளி மாநிலத்திற்கு கடத்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் சல்மான் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வெளி மாநிலத்திற்கு கடத்த ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் மற்றும் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோர் சமந்தப்பட்ட வீட்டிற்க்கு விரைந்து சென்றனர். அதிகாரிகள் வருவதை தகவல் அறிந்த ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் வீட்டில் இருந்து தப்பி ஒடியுள்ளனர் இதனை தொடர்ந்தது வருவாய்த்துறையினர் வீட்டை சோதனை செய்தனர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 6

0

0