உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 1 லட்சம் ரூபாய் பறிமுதல்

Author: Udhayakumar Raman
26 September 2021, 6:53 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 1 லட்சம் ரூபாயைபறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்தில் தனி- தாசில்தார் சத்திய நாராயணன் தலைமையில் காவல் சிறப்பு ஆய்வாளர் சண்முகம் மற்றும் தலைமை காவலர்கள் சுதாகர், சுகுமார் ஆகியோரை கொண்ட பறக்கும் படை குழுவினர் சங்கராபுரம் அருகே உள்ள இளையாங்கண்ணி கூட்ரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை வழிமறித்த பறக்கும் படையினர் சோதனை செய்தபோது, அதில் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்தஜான் ஜோசப் என்பவர்உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ரூபாய் 1 லட்சம் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் உதவியாளர் பிரதிப் குமாரிடம் ஒப்படைத்தனர்.

Views: - 89

0

0