காரில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ புகையிலை பறிமுதல்: கடத்தலில் ஈடுப்பட்ட நபர் கைது…

Author: Udhayakumar Raman
22 September 2021, 4:31 pm
Quick Share

திருவள்ளூர்: பெங்களூருவில் இருந்து சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 கிலோ புகையிலையை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுப்பட்ட நபரை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை யில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அதிவேகமாக சென்ற சொகுசு காரை சுற்றிவளைத்து பரிசோதனை மேற்கொண்டதில், காரில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 100 கிலோ ஆன்ஸ் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுனரை கைது செய்த போலீசார் அவரிம் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஆண்டார் குப்பத்தை சார்ந்த தேவதாஸ் மகன் சிவா என்பதும், பெங்களூருவில் இருந்து விற்பனைக்கு கடைகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் புகையிலை பொருட்களை கொண்டு வந்தது தெரியவந்தது.விசாரணைக்குப் பின்னர் அவரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 89

0

0