மினி லாரியில் கடத்திவரப்பட்ட 1,000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

Author: kavin kumar
6 October 2021, 4:54 pm
Quick Share

திண்டுக்கல்: சின்னாளபட்டி அருகே மினி லாரியில் பழங்களுக்கு அடியில் மறைத்து கடத்தப்பட்ட தடை செய்யப்பட்ட லட்சம் மதிப்புள்ள 1000 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஓசூரில் இருந்து மதுரைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இன்று மாலை நெடுஞ்சாலை ரோந்து படையினர் சின்னாளபட்டி அருகே திண்டுக்கல் மதுரை 4 வழிச் சாலையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது ஒரு மினி லாரியில் சாத்துகுடி, அன்னாசி, தர்பூசனி ஆகிய பழங்கள் 20 மூடைகளில் இருந்தது. போலீசார் பழ மூடைகளை ஆய்வு செய்தனர் அப்போது புகையிலை வாடை வந்ததை அடுத்து பழ மூடைகளை அகற்றி பார்த்தனர். பழ மூடைகளுக்கு அடியில் அடியில் 27 மூடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதனை தொடர்ந்து அந்த மினி லாரியை அம்பாத்துரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தகவலறிந்து வந்த திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் விஜயகுமாரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் நேரில் வந்து பிடிப்பட்ட குட்கா மூடைகளை பிரித்து ஆய்வு செய்தனர்.

அதில் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை, விமல் பான்பராக் ஆகியவை இருந்தது. இது குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்து குட்கா பொருட்களை கடத்தி வந்த தூத்துகுடியை சேர்ந்த பிரசாத், ஈஸ்வரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் ஆகும். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்துவதையும்,விற்பனை செய்வதையும் தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இன்று திண்டுக்கல் வழியாக மதுரைக்கு குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து நெடுஞ்சாலை ரோந்து படையினர் ஆய்வு செய்தனர். அப்போது பழ மூடைகளுக்குள் மறைத்து தடை செய்யப்பட்ட 27 மூடைகளில் 1000 கிலோ குட்கா பொருட்கள் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டு பிடிக்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.20 லட்சம். பள்ளி, கல்லூரி தொடங்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்துபவர்கள்,விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து இதே குற்ற செயலில் ஈடுப்பட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். என்றார்.

Views: - 230

0

0