அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவரை கைது செய்து விசாரணை

6 March 2021, 4:23 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து தமிழக அரசு பேருந்தில் பயணிகள் போன்று கடத்திச் சென்ற 15 கிலோ கஞ்சாவை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பஞ்செட்டியில் பொன்னேரி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் தனி வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் பறக்கும் படையினர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் மாதவரம் நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பேருந்தில் 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் விசாரணை மேற்கொண்டதில், பயணிகள் போன்று 15கிலோ கஞ்சாவை 7 பிளாஸ்டிக் பைகளில் மறைத்து கடத்தியது தெரியவந்துள்ளது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டுவரும் நிலையில் பணம் பரிசுப் பொருட்கள் கைப்பற்றபாடாத நிலையில் 15கிலோ கஞ்சா பேருந்தில் சிக்கிய து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 2

0

0