சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 1500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 4 பேர் கைது
Author: kavin kumar5 October 2021, 6:29 pm
திருவள்ளூர்: சோழவரம் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1500 கிலோ பான் புகையிலை குட்கா சொகுசு காருடன் போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுப்பட்ட 4 பேரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காந்திநகரில் சொகுசு காரில் பெங்களூரில் இருந்துகடத்திவரப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 300 கிலோ பான் குட்கா புகையிலை பொருட்களை போலீசார் வாகன சோதனை பறிமுதல் செய்து, திருநின்றவுரை சேர்ந்த ஓம் பிரகாஷ், பிரகாஷ் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், பெங்களூரில் இருந்து குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்து பொன்னேரி சோழவரம் பகுதிகளில் புருஷோத்தமன் இருவரும் 2 வீடுகளில் குடோன் அமைத்து சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 1500 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.
தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சோழவரம் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் உதவி காவல் ஆய்வாளர் மகாலிங்கம் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர். குட்கா புகையிலை கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தடை செய்யப்பட்ட பான் குட்கா அதிக அளவில் விலை வைத்து கடத்தி விற்பனை செய்யப்படுவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்தார்.
0
0