நூதனமாக கடத்தப்பட்ட 20 கிலோ பாலிகீட்ஸ் பறிமுதல்: கடத்தலில் ஈடுப்பட்ட 2 பேர் கைது

3 November 2020, 4:56 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு வாகனத்தில் குளிர்சாதன வசதியுடன் ஆந்திராவிற்கு சட்ட விரோதமாக நூதனமாக கடத்தப்பட்ட 20 கிலோ பாலிகீட்ஸ் அரியவகை மண்புழுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் கும்மிடிப்பூண்டி வனச்சரக அலுவலர் சுரேஷ்பாபு தலைமையிலான வனத்துறையினர் குழு சோதனை மேற்கொண்டனர். அப்போது கடலூரிலிருந்து உவர்நில பாலிகீட்ஸ் மண்புழுக்களை சுமார்
20 கிலோ அளவிற்கு ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு சரக்கு வாகனத்தில் குளிர்சாதன வசதியுடன்,

கடலூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம், சிதம்பரத்தை சேர்ந்த வினயத்துல்லா என்ற இருவர் கடத்திச் சென்றது தெரியவந்தது. அதில் 20 கிலோ எடைகொண்ட அறிய வகை பாலிகீட்ஸ் மண்புழுக்களை கடத்தி சென்ற போது பறிமுதல் செய்து இருவரை கைது செய்து ஆரம்பாக்கம் போலீசார் உதவியுடன்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீன்களைக் கொண்டு செல்வது போல் நூதனமாக பாலீகீட்ஸ் புழுக்களை கடத்திசென்று கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 16

0

0