கடத்தவிருந்த 60 மூட்டைகளில் இருந்த 3 டன் மதிப்பிலான ரேசன் அரிசி பறிமுதல்

11 November 2020, 9:26 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கள்ளத்தனமாக கடத்தவிருந்த 60 மூட்டைகளில் இருந்த 3 டன் மதிப்பிலான ரேசன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அழிஞ்சிகுளம் பகுதியில் கள்ளத்தனமாக ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாட்றம்பள்ளி வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அழிஞ்சிகுளம் பகுதியில் சோதனை மேற்க்கொண்டனர்.

அப்போது நாகலேரி என்ற ஏரிப்பகுதியில் உள்ள முட்புதர் அருகில் சுமார் 60 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 டன் ரேசன் அரிசியை தனிவட்டாச்சியர் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும் ரேசன் அரிசி பதுக்கல் குறித்து தனிவட்டாச்சியர் அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து ரேசன் அரிசி பதுக்கலில் ஈடுப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

Views: - 20

0

0