உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 30 கிலோ வெள்ளி 19 லட்சம் ரொக்க பணம் பறிமுதல்: வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு…

Author: kavin kumar
10 August 2021, 8:31 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆந்திராவிலிருந்து உரிய ஆவணம் இன்றி சொகுசு காரில் கொண்டுவரப்பட்ட 30 கிலோ வெள்ளி மற்றும் 19 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, உரிய ஆவணங்கள் இல்லாததால் கும்முடிபூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசுகார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது. அதில் 30 கிலோ வெள்ளி கட்டிகள், 19 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அதனை பறிமுதல் செய்த ஆரம்பாக்கம் காவல்துறையினர் காரில் வந்த சேலத்தை சேர்ந்த அருண்குமார் என்ற நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில்,

இவர் வெள்ளி தங்க நகைகளை கொண்டுவந்து விற்பனை செய்வதாக தெரிவித்ததை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி மற்றும் 19 லட்சம் ரூபாய் பணத்தை ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டுசென்றனர் விசாரணைக்குப் பின்னர் உரிய ஆவணங்கள் இல்லாததால் கும்மிடிபூண்டி வட்டாட்சியர்அலுவலக கருவூலத்தில் பணம் வெள்ளிகட்டி ஒப்படைக்கப்பட்டு உரிய ஆவணங்களை காண்பித்து அதனை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 166

0

0