குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 4.5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்…
Author: kavin kumar20 August 2021, 5:56 pm
சென்னை: மாதவரம் பகுதியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 4.5 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை மாதவரம் பகுதியில் குடோன் ஒன்றில் வடமாநிலத்தில் இருந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள 100 குடோன் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கிடங்கு ஒன்றில் சந்திர பிரகாஷ் வயது என்பவர் கண்டெய்னர் லாரிகளை வைத்து இந்தியா முழுவதும் சரக்கு போக்குவரத்து பணிக்காக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் குடோனுக்கு வந்த லாரி ஒன்று மாதவரம் CMDA வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். சந்தேகத்தின் பேரில் அங்கு சென்ற போலீசார் லாரியை மாதவரம் துணை ஆனையர் தலைமையில் சோதனையிட்டனர்.அப்போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 4 அரை டன் எடையுடன் 50 மூட்டைகளில் இருப்பதும் ஒவ்வொரு மூட்டைகளில் 90 கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து இதன் உரிமையாளர் சந்திர குமார் ஜெயின் மற்றும் லாரி ஒட்டுனர் அலாவுதீன் இருவரை கைது செய்து மாதவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0