வீட்டில் பதுக்கி வைத்திருந்த 60 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது…

Author: kavin kumar
23 August 2021, 1:27 pm
Quick Share

சென்னை: சென்னையில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த, 60 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் எழில் நகர் சிவசக்தி கோயில் அருகே கொடுங்கையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை பிடித்து விசாரணை செய்ததில் , அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 5 கிலோ குட்கா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த வால் டாக்ஸ் ரோடு , பொன்னப்ப தெரு பகுதியைச் சேர்ந்த பிரதீப் ஜெயின் என்ற நபரை கொடுங்கையூர் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் தனது வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவரது வீட்டில் சோதனை செய்த போது 55 கிலோ குட்கா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த கொடுங்கையூர் போலீசார் பிரதீப் ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 211

0

0