சென்னையில் 7 டன் எடையுள்ள ரேசன் அரிசி 150 மூட்டைகள் பறிமுதல்

24 September 2020, 8:57 pm
Quick Share

சென்னை: சென்னையில் 7 டன் எடையுள்ள ரேசன் அரிசி 150 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கொளத்தூர் கண்ணகி நகர் , சுப்ரமணியன் தெருவில் ராமசாமி என்பவர் கடந்த ஒரு வருடமாக மாவுமில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த மாவுமில்லின் குடோனில் ரேசன் அரிசிகள் மூட்டை மூட்டையாக பதுக்கப்படுவதாக ராஜமங்கலம் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ராஜமங்கலம் போலீசார் குடோனில் அதிரடியாக சோதனைகளை நடத்தினர். அப்போது அங்கு ரேசன் அரிசிகள் மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாவுமில் மற்றும் குடோனை நடத்தி வந்த ராமசாமி, சக்தி குரு ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில், கொளத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் அரிசிகள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு, ரெட்ஹில்ஸ் பகுதியில் அதிக விலைக்கு விற்க்கப்படுவது தெரியவந்தது. அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்ட லாரி , 7 டன் ரேசன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி , உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ராஜமங்கலம் போலீசார் ஒப்படைத்தனர்.