வெளிநாடுகளுக்கு கடத்த விருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்: இளைஞர் கைது

15 January 2021, 4:59 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வெளிநாடுகளுக்கு கடத்தவிருந்த  புலிநகம் எறும்புத்தின்னி செதில்கள் கிளிஒரு டன்  செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் பிடிமூர்த்தி நகரில் வீட்டில் பதுக்கி செம்மரங்களை கடத்தி வருவதாக கும்முடிபூண்டி மாதர்பாக்கம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதன்பேரில் அங்கு சென்று போலீசார் சோதனை மேற்கொண்டபோது, ஒரு டன் செம்மரக்கட்டைகள், புலி நகம், எறும்புத்தின்னி செதில்கள், கிளி உள்ளிட்டவைகளை கடத்துவதற்காக வீட்டில்  வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட அரவிந்தன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

எறும்புத்தின்னி செதில்களுக்கும், செம்மரங்களுக்கு  சர்வதேச சந்தைகளில் அதிக அளவில் பணம் கிடைக்கும் என்பதால் கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அவற்றின் மதிப்பு இந்திய மதிப்பில் பத்து லட்ச ரூபாய் இருக்கும் எனவும் தெரிவித்த வனத்துறையினர், வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து அவரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 3

0

0