1 லட்சம் மதிப்பிலான தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

5 February 2021, 8:10 am
Quick Share

அரியலூர்; அரியலூரில் 1 லட்சம் மதிப்பிலான தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யபடுகிறதா என அரியலூர் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது தலைமையில் நடைப்பெற்ற ஆய்வில் மளிகை கடைகள், வணிக நிறுவனங்கள், இறைச்சி கடைகளில் வைக்கபட்டிருந்த 1 லட்சத்தி 3 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் கப்புகள், பாலீதின் பைகள்,

மெழுகுதாள்கள், மெழுகு கப்புகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் தடையை மீறி விற்பனை செய்த கடைகளுக்கு அபராதமும் விதிக்கபட்டது. மேலும் தடை செய்யபட்ட பொருட்களை மீண்டும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர். இதில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Views: - 0

0

0