மூட்டை மூட்டையாக மாவா பறிமுதல்: பெண் உட்பட இருவர் கைது

Author: kavin kumar
26 September 2021, 1:59 pm
Quick Share

சென்னை: கொடுங்கையூரில் தடை செய்யப்பட்ட மாவா விற்ற பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 100 கிலோ மாவாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் 3 வது தெருவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா விற்கப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் , கண்ணதாசன் நகர் 3 வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மூட்டை மூட்டையாக மாவா மற்றும் மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், உஷா, காளியப்பன் என்ற 2 பேரை கைது செய்தனர். அவர்கள் வீட்டிலிருந்து சுமார் 100 கிலோ மாவா மற்றும் மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் கைப்பற்றப் பட்டன. கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 154

0

0