விமான பயணியிடமிருந்து ரூ.47.65 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி பறிமுதல்

1 March 2021, 11:44 pm
Quick Share

கோவை: கோவையில் கடத்தி வரப்பட்ட ரூ.47.65 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி விமான பயணியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமான மூலம் கோவை விமான நிலையம் வந்த பயணியியை சந்தேகத்தின் அடிப்படையில், விமான நிலையத்தில் பணியில் இருந்த மத்திய வருவாய் புலனாய்வு மற்றும் விமான புலனாய்வு அமைப்பினர் ஒன்றிணைந்து சோதனை செய்தனர். சிவகங்கையை சேர்ந்த பாலு என்கிற பயணி, கைப்பையில் மறைத்து எடுத்து வரப்பட்ட ரூ.47 லட்சத்து 65 ஆயிரத்து மதிப்புள்ள 999 கிராம் தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். போன் வடிவிலான பார் தங்க கட்டியை பறிமுதல் செய்ததுடன், தங்க கட்டியை மறைத்து எடுத்து வந்த பயணியை கைது செய்ததுடன், கடத்தல் பொருள் ரூ.50 லட்சத்திற்கு குறைவு என்பதால் கைது செய்து பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Views: - 0

0

0