உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூபாய் 56,550 பணம் பறிமுதல்….

Author: Udhayakumar Raman
22 September 2021, 2:56 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் தேர்தல் பறக்கும் படையினரால் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூபாய். 56,550 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் – உளுந்தூர்பேட்டை மெயின் ரோட்டில் மேமாளூர் கிராம பேருந்து நிறுத்தம் அருகில், தேர்தல் பறக்கும் பறக்கும் படையைச் சேர்ந்த வட்ட வழங்கல் அலுவலர் அந்தோணி ராஜ் தலைமையில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சாம் அல்போன்ஸ், முதல் நிலை காவலர் சுரேஷ் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருக்கோவிலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் பயணித்த விழுப்புரத்தை சேர்ந்த பாலுசாமி என்பது மகன் மனோஜிடம் சோதனை செய்ததில், உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 56 ஆயிரத்து 550 ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, திருக்கோவிலூர் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ரேச்சல் கலைச்செல்வியிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

Views: - 57

0

0