சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்

Author: kavin kumar
19 August 2021, 1:56 pm
Quick Share

வேலூர்: விரிஞ்சிபுரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சந்தேகத்திற்கிடமாக பல மணிநேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து செம்மரம் கட்டை மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் பொய்கை அருகில் பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் பலமணி நேரமாக கர்நாடக பதிவு எண் கொண்ட ஸ்கார்பியோ கார் ஒன்று நின்று கொண்டிருப்பதாக விரிஞ்சிபுரம் காவல் துறையினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு சென்ற விரிஞ்சிபுரம் காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான காரை சோதனை செய்த போது அதில் சுமார் 300 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. செம்மரக்கட்டைகளுடன் இருந்த காரை பறிமுதல் செய்த விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காரை விட்டுசென்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை வேலூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Views: - 543

0

0