எரி சாராயம் காய்ச்சுவதற்காக கொண்டு செல்லப்பட்ட சர்க்கரை பறிமுதல்: ஒருவர் கைது….

Author: kavin kumar
22 October 2021, 1:23 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே எரி சாராயம் காய்ச்சுவதற்காக கொண்டு செல்லப்பட்ட 2,250 கிலோ சர்க்கரையை பறிமுதல் செய்த போலீசார் ஒருவர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பூட்டை செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர் அவ்வழியாக வந்த மினி டாட்டா ஏசி வண்டியை மறித்து சோதனை செய்தபோது வண்டியில் 50 கிலோ எடை கொண்ட 45 மூட்டை சர்க்கரையும்,அதன்மேல் 16 மூட்டை யூரியா, கலைக்கொல்லி மருந்தும்,120 லிட்டர் எரி சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை செய்ததில் சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் முருகன் வண்டி டிரைவர் என்பதும்,

சாராயம் காய்ச்சுவதற்காக சக்கரையை எடுத்துச் செல்வதாக விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து சாராயம் காய்ச்சுவதற்காக வாங்கிவரச் சொன்ன குரும்பாலூர் கிராமத்தைச் சேர்ந்த மாயவன் மற்றும் வண்டியின் உரிமையாளர் சேராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஜித் மீதும் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.பின்னர் 120 சாராயத்தையும்,வண்டியையும் சர்க்கரையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.2250 கிலோ கொண்ட சக்கரையின் மதிப்பு 89,000 ஆயிரம் என தெரியவந்தது.

Views: - 126

0

0