கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தியின் 51 வது பிறந்த நாள் கொண்டாட்டம்

19 June 2021, 2:56 pm
Quick Share

கிருஷ்ணகிரி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 51 வது பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்றது

கொரோனா நோயினால் வருவாய் இழந்து வாழும் ஏழை எளிய 125 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு சமையல் எண்ணொய், மாவு, சர்க்கரை, சோப்பு, உப்பு உள்ளிட்ட 19 விதமான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் தளபதி ரகமத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், மாநில செயற்குழு உறுப்பினர் அக.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி,

மாநில பொதுக்குழு உறுப்பினர் சூர்யா கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன், பட்டதாரி அணி மாவட்ட தலைவர் சரவணன், மீனவர் அணி மாவட்ட தலைவர் செல்வம், ராகுல் காந்தி புரட்சி பேரவை செயல் தலைவர் பாபு, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஷபிக் அஹ்மத், ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டனர்.

Views: - 108

0

0