ஏழரை மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் வீச்சு: மாணவ மாணவிகள் சாதனை

29 August 2020, 8:48 pm
Quick Share

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் முதல்முறையாக ஏழரை மணி நேரம் தொடர்ந்து சிலம்பு வீச்சு செய்து மாணவ மாணவிகள் சாதனை படைத்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காரணம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரிக்கரை மைதானத்தில் தமிழ்நாடு சிலம்பாட்ட குழு சார்பில் நோபல் வேர்ல்டு ரெக்கார்டு செய்யும் வகையில் 7 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு ஒரு நிமிடத்திற்கு 14 சுற்றும் ஒரு மணி நேரத்தில், 840 சுற்றும் 7.30.மணி நேரத்திற்கு, 6,300 சுற்றி செய்து, சர்வதேச தொழில் நுட்ப இயக்குனர் சந்தோஷ் குமார் முன்னிலையில் மாணவ, மாணவிகள் இரட்டைக் கொம்பு ஒற்றைக் கொம்பு இரட்டை வால் வீச்சு என சுற்றி காட்டப்பட்டு சாதனை படைத்தனர். இதனால் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை படைத்தனர். இதனை அந்த கிராமத்து மக்கள் மகிழ்ச்சி அடைய செய்தது.

Views: - 1

0

0