17 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த நபர் கைது

12 January 2021, 6:41 pm
Quick Share

செங்கல்பட்டு: மனநலம் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுடன் தூங்கிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியான 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் அடுத்த கப்பிவாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். அவரது மகன் ராஜாராம் வயது 38. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் சென்னையில் தனியார் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மாற்றுத்திறனாளியான தந்தையையும் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் ஆகியோர்களை வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் இரவு நேரத்தில் மாணவி தனியாக இருக்கும் சமயத்தில் வீட்டுக்குள் சென்ற ராஜாராமன் அந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் . தூக்கத்தில் இருந்த அந்தச் சிறுமி அலறிஅடித்து எழுந்து சத்தம் போட்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுமியின் வீட்டிற்குச் சென்று ராஜாராமனை கையும் களவுமாக பிடித்து மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பாலியல் சீண்டல் செய்த ராஜாராமனை மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 3

0

0