15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

By: Udayaraman
2 October 2020, 11:18 pm
Quick Share

சென்னை: புளியந்தோப்பு அருகே 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது

சென்னை புளியந்தோப்பு சேர்ந்த 15 வயது சிறுமி காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்யும் ராஜேஷ் என்பவர் சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி கடந்த மாதம் 28 ம் தேதி அழைத்து சென்றது தெரியவந்தது. ராஜேஷின் செல்போன் நம்பரை வைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் திருச்சி, சேலம் என ராஜேஷ் மாறி மாறி சுற்றி வந்ததால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீஸ் நெருங்கி வருவதை அறிந்த ராஜேஷ் நேற்று முன்தினம் சிறுமியை அவளது வீட்டருகே விட்டு விட்டு தப்பிச் சென்றார். இந்நிலையில் நேற்று ஓட்டேரி பாலம் அருகே மறைந்திருந்த ராஜேஷை புளியந்தோப்பு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் அனுராதா போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Views: - 40

0

0