வாலிபருக்கு அரிவாள் வெட்டு: தொடர்ந்து இரண்டாவது நாளாக கொலைவெறி தாக்குதல்

Author: Udhayakumar Raman
17 September 2021, 2:57 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வாலிபர்கள் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக கொலைவெறி தாக்குதல் நடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா உட்பட்ட குட்டியபட்டி பகுதியில் திண்டுக்கல் பேகம்பூர் மக்கான் தெருவை சேர்ந்த இப்ராஹிம் என்பவரை காட்டுப் பகுதிக்குள் மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தை திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் பார்வையிட்டார். திண்டுக்கல்லில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொலைவெறி தாக்குதல் நடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெட்டுப்பட்டவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Views: - 258

0

0