ஆளுநர் மாளிகை மற்றும் சட்டசபை முற்றுகை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க கோரிக்கை

2 November 2020, 4:47 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கக்கோரி ஆளுநர் மாளிகை மற்றும் சட்டசபையை முற்றுகையிட முயன்ற 200க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்களுக்கும், போலீசாருக்குமிடையே தள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.

புதுச்சேரியில் அமைப்பு சார தொழிலாளர்களுக்கு உடனடியாக நல வாரியம் அமைக்க வேண்டும், தீபாவளி உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், பாசிக், பாப்ஸ்கோ உள்ளிட்ட பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும், மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளை மீண்டும் திறந்த இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி

புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகை மற்றும் சட்டசபை அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரின் தடுப்புகளை மீறி தொழிலாளர்கள் முற்றுகையிட முயன்றதால் இரு தரப்பினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட முயன்ற அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Views: - 20

0

0