சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டம்: நாள் ஒன்றுக்கும் 20 லட்சம் உற்பத்தி இழப்பு

13 January 2021, 2:18 pm
Quick Share

விருதுநகர்: ராஜபாளையம் பகுதியில் நூல் விலை உயர்வால் சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால், நாள் ஒன்றுக்கும் 20 லட்சம் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி மற்றும் அம்பலபுளி பஜார் பகுதிகளில் சுமார் 2500க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சேலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேரடியாக 2,000 நபர்களும் மறைமுகமாக 2,000 நபர்கள் என 4 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தற்போது நூல் விலை கடந்த மாதம் 900 ரூபாய் விற்ற நூல் தற்போது 1300 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதால் தங்களால் தொடர்ந்து தொழிலில் ஈடுபட முடியாமல் சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் சங்கத்தில் சாராத உறுப்பினர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நூல் விலை உயர்வு ஒரு பக்கம் இருக்கும் பொழுது சாயம் பட்டறைகளை நூலுக்கு சாயம் செய்வதிலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து எங்களால் வேலை செய்ய இயலவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விசைத்தறி உர்ப்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாண்டியராஜன் தெரிவித்தார். மேலும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதில் தலையிட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். நூல் விலை உயர்வு குறித்து அவர்கள் கூறும்போது,

நூல்களை சில இடங்களில் பதுக்கி உள்ளதாகவும், பஞ்சு ஏற்றுமதி செய்வதால் பஞ்சு தட்டுப்பாடு நூல் தட்டுப்பாடு ஏற்படுகிறது நூலின் விலை உயர்ந்துள்ளது. மத்திய அரசு ஜிஎஸ்டி வசூல் செய்கின்றனர். ஆனால் இதுபோன்ற பஞ்சு பதுக்கலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விசைத்தறி தொழிலாளர்கள் நலன் காக்க வேண்டும் வாழ்வாதரம் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 2

0

0