புழல் மத்திய சிறையில் ஈரான் கைதியிடம் செல்போன் பறிமுதல்

28 February 2021, 3:39 pm
Puzal Jail- updatenews360
Quick Share

திருவள்ளூர்: புழல் மத்திய சிறை தண்டனை பிரிவில், ஈரான் நாட்டு கைதி முகமது ஷிப்ரான் என்பவரிடமிருந்து செல்போன் சிறைத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை புழல் மத்திய சிறை தண்டணை பிரிவு பகுதியில் செல்போன் பயன்படுத்துவதாக சிறைதுறையினருக்கு இரகசியல் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சிறைதுறையினர் நடத்திய சோதனையில், ஈரான் நாட்டு கைதி முகமது ஷிப்ரான் என்பவர் மறைத்து வைத்திருந்த செல்போனை சிறைதுறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் சிறையில் பதுக்கி வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0