மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இலவச மரக்கன்றுகளை வழங்கிய சமூக ஆர்வலர்

17 April 2021, 7:43 pm
Quick Share

வேலூர்: வேலூரில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 100 வீடுகளுக்கு இலவச மரக்கன்றுகளை சமூக ஆர்வலர் வழங்கினார்.

இன்று திரைப்பட நடிகர் கலைமாமணி விவேக் காலமானார். அதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் விவேக் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனை அடுத்து வேலூர் மாவட்டம் வேலூர் வள்ளலார் பகுதியில் தமிழக முதலமைச்சரால் பாராட்டப்பெற்ற வேலூர் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் வள்ளலார் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சைக்கிள் ரிக்க்ஷா மூலம் நேரடியாக வீடுகளுக்குச் சென்று மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பொதுமக்களுக்கு அவர் எத்தனை மரக்கன்றுகள் தமிழகம் முழுவதும் நட்டு உள்ளார். என்பதை பொது மக்களுக்கு எடுத்துக் கூறி அவரது நினைவாக வீட்டில் மரக்கன்றுகளை நடுவதற்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

Views: - 71

0

0