பெற்றோரை ஏமாற்றி நிலத்தை அபகரித்த மகன்கள்: மீட்டு கொடுத்த அரசுக்கு நன்றி தெரிவித்த முதியவர்

19 November 2020, 8:18 pm
Quick Share

வேலூர்: பெற்றோரை ஏமாற்றி நிலத்தை அபகரித்த மகன்களிடம் இருந்து சொத்துகளை மீட்டுக்கொடுத்த அரசு அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் முதியவர் நன்றி தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பொன்னை கிராமத்தில் வசித்து வரும் ரேணுகோபால் (82) என்பவர் தனக்கு மூன்று ஆண் மகன்கள், மூன்று பெண் மகள்கள் உள்ளனர். 2013ஆம் வருடம் தனது மூன்று ஆண் மகன்கள் மீது தனது அனைத்து சொத்துக்களையும் எழுதி கொடுத்து விட்டேன் என்றும், அதன் பின்பு தனது மகன்கள் தனக்கு சாப்பிட உணவு கூட கொடுக்காமல் எந்த அடிப்படை வசதியும் செய்யாமல் தன்னை மிகவும் துன்புறுத்தி வருகிறார்கள் என்றும், அதனால் தான் எழுதி கொடுத்த சொத்துக்களை மறுபடியும் தன் பெயரில் எழுதி வைக்குமாறு வேலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்திருந்தார்.

அதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் பெற்றோர், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் பிரிவு 4(1) மற்றும் 23(1) கீழ் ரேணுகோபால் தானமாக தன் மூன்று மகன்கள் மீது எழுதிக்கொடுத்த அனைத்து சொத்துக்களையும் ரத்து செய்து மீண்டும் ரேணுகோபால் பெயருக்கே மாற்றி கொடுக்க மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு முதியவருக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மீட்டு முதியவர் இடமே ஒப்படைத்தனர். உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தன்னுடைய இடத்தை மீட்டுக்கொடுத்த அரசு அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் முதியவர் நன்றி தெரிவித்தார்.

Views: - 17

0

0