ஒலி & ஒளி அமைப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

19 April 2021, 4:32 pm
Quick Share

விருதுநகர்: 50 சதவீதம் தளர்வுகளுடன் திருவிழா மற்றும் சுப நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்க கோரி ஒலி & ஒளி அமைப்பாளர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் மனு அளித்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டடுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி 50 சதவீதம் தளர்வுகளுடன் திருவிழாக்களுக்கு அனுமதி வழங்க கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் ஒலி & ஒளி அமைப்பாளர்கள் மனு அளித்தனர். அதில் அம் மனுவில்,” விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 400 க்கும் மேற்பட்ட ஒலி&ஒளி அமைப்பாளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் இவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

8 மாதத்திற்கு பிறகு ஊரடங்கு தளர்வு காரணமாக தங்கள் பாதிப்பிலிருந்து தற்போது தான் விடுபட துவங்கி உள்ளனர்.ஆனால் கடந்த ஏப்ரல் 10 ம்தேதி மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.இந்த ஊரடங்கில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒலி& ஒளி அமைப்பாளர்களாகிய தங்கள் வாழ்வாதாரம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மதம் சார்ந்த சமூக நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் தனியார் நிறுவனம் சார்ந்த கூட்டங்கள் தடையை நீக்கி சிறப்பு அனுமதி அளித்து 50% தளர்வுடன் நடத்திட அனுமதி வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Views: - 27

0

0