பேருந்து போக்குவரத்து தொடங்கிய முதல் நாளே பழுதான அரசு பேருந்து ……

2 September 2020, 2:25 pm
Quick Share

கோவை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக பேருந்து போக்குவரத்து இல்லாமல் இருந்தது. பொள்ளாச்சியில் பேருந்து போக்குவரத்து இல்லாததால் மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.இந்நிலையில் பொது போக்குவரத்து தொடங்கிய முதல் நாளான நேற்று பொள்ளாச்சியில் இருந்து வேடைக்காரன் புதூர்  செல்லும் அரசு பேருந்து  11 A பயணிகளுடன் வேட்டைக்காரன்புதூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டு இருந்தது.

பேருந்து பொள்ளாச்சி பாலக்காடு வழித்தடத்தில் வந்து கொண்டு இருந்தது அப்போது  யாரும் எதிர்பாராத விதமாக பேருந்து பொள்ளாச்சி முனிசிபாலிட்டி முன்பாக பழுதடைந்து நின்றது.  பேருந்து பழுதாகி நடுரோட்டில் நின்றதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.இந்நிலையில் நடுரோட்டில் நின்ற பேருந்தால்  போக்குவரத்து நெரிசல் ஏட்படாமல் இருக்க பேருந்து  நடத்துனர் , பொதுமக்கள் மற்றும் சில பயணிகளின் உதவியுடன் பேருந்தை  சாலை ஓரமாக  நிறுத்தினர்.  

பேருந்து போக்குவரத்து இதனை நாள் இல்லாமல் பொள்ளாச்சி வாழ் மக்கள் அவதிஅடைத்த நிலையில்  இன்று  பொது போக்குவரத்து இயங்க தமிழக அரசு அனுமதி அளித்த நிலையிலும்   பேருந்து பழுதானதால்  பயணிகள் அவதியடைத்தனர். பொள்ளாச்சியில்  பேருந்து போக்குவரத்து துவங்கிய முதல் நாளே பேருந்து  பழுதடைந்து நடுவழியில் நின்றது  பயணம் செய்தவர்கள் மட்டும்மின்றி பொதுமக்களையும் அதிர்ப்பிக்கு உள்ளாகுவதோடு  அனைவரையும் வருத்தம் அடைய செய்வதாகவும்  உள்ளது என பொதுமக்களும் பயணிகளும் கூறினர்.

Views: - 7

0

0