காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை விசாரிக்கும் சிறப்பு முகாம்

9 November 2020, 4:28 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை விசாரிக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்களால் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு சிறப்பு முகாம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்டு 10 காவல் நிலையங்கள் உள்ளன. கடந்த கொரோணா ஊரடங்கு காலங்களில் பொது மக்களால் வழங்கப்பட்ட கிரிமினல் வழக்குகளுக்கு உட்படாத பிற மனுக்கள் ஏராளமானவை மனு ரசீது வழங்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் விசாரணை என்ற நிலையிலேயே இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதி மன்றத்திற்கு செல்லாமல் விசாரணை என்ற நிலையிலேயே இருந்த நூற்றுக்கணக்கான மனுக்களை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள மனுக்களை விசாரித்து அதற்கு உண்டான தீர்வு வழங்குவதற்காக சிறப்பு முகாம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது. தற்போது வரையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் அனைத்து காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்துகொண்டு மனுக்கள் மீதான விசாரணையை நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Views: - 19

0

0