மூன்றாம் பாலினத்தவர்க்கு மின்னணு ரேஷன் கார்டு .! பிப்- 13 -ம் தேதி சிறப்பு முகாம் என குமரி மாவட்ட ஆட்சியர் தகவல்.!

7 February 2021, 8:32 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் மின்னணு ரேசன் கார்டு பெற பிப்-13 ந்தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தகவல் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது;- குமரி மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏதுவாக பிப்ரவரி 13ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மாவட்டத்தில் உள்ள ஆறு வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் வைத்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 18 வயது பூர்த்தியான மின்னணு குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்க ஏதுவாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முகவரி ஆதாரம் புகைப்படம் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0