சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Author: Udhayakumar Raman
26 September 2021, 3:32 pm
Quick Share

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாவட்டம், வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையும் இணைந்து சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தினார். இதில் விவசாயிகளும் பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஞாயிற்றுகிழமையான இன்று சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் 804 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. மக்கள் ஒத்துழைப்பு அளித்து தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். இன்று மாலை 7 வரை முகாம்கள் நடக்கிறது. இன்று 56900 தடுப்பூசிகள் உள்ளது. இவைகள் அனைத்தையும் போட்டு முடித்துவிடுவோம். ஆறுகளில் இருந்து தண்ணீர் ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்கள் உடைக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவ்வாறு செய்பவர்களின் மீது குற்றவழக்குகள் பதிவு செய்யபடும் என்று கூறினார்.

Views: - 312

0

0