தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு வழிபாடு:பொதுமக்கள் சாமி தரிசனம்

Author: kavin kumar
4 November 2021, 1:57 pm
Quick Share

தஞ்சை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து காலை முதலே பொதுமக்கள் உறவினர்களுடன் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசுகள் தான் ஞாபகத்திற்கு வரும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து கொண்டு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் தமிழக அரசின் நேரக் கட்டுப்பாடுகள் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொதுமக்கள் புதிய புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில் இன்றைய தினம் மழை பெய்யாததால் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இளைஞர்கள் தங்களின் நண்பர்களுடனும் புதுமண தம்பதிகள் காலையிலேயே தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றன மேலும் அவர்கள் குழு படம் எடுத்துக் மகிழ்ச்சி அடைந்தனர் கடந்த ஆண்டு கொரோனாவால் கடுமையாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு நிலையில் இந்த ஆண்டு கொரோனா சற்று குறைந்துள்ள நிலையில் சாமி தரிசனம் செய்து தஞ்சை பெருவுடையாருக்கு பாலபிஷேகம் தீபாவளி சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டதை பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

Views: - 209

0

0