இந்திய அளவிலான போட்டியில் முதல் பரிசு பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவர்கள்..!

5 August 2020, 6:16 pm
Quick Share

கோவை: தேசிய அளவில் நடைபெற்ற ஹேக்கத்தான் போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கணிபொறியியல் மாணவர்களான விஜயாலன், ஸ்வேதா, நவீன் குமார், நிதின், சஞ்சய் குமார் மற்றும் கிரண் சுப்ரமணியன் கொண்ட ஸிரோ பகர்ஸ் என்னும் அணி மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத் துறை மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கழகம் இணைந்து இந்திய அளவில் நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த மாணவர்கள் சிறையில் சந்தேகத்திற்குரிய நடமாட்டத்தை கண்காணித்தல் மற்றும் தடுத்தல் என்ற தலைப்பில் போட்டியில் கலந்து கொண்டனர்.

சிறையில் உள்ள ஒவ்வொரு பகுதியின் முன்பும் வெப்கேம் மற்றும் திரை வைத்து கண்காணிக்கும் திட்டம் மூலமாக, ஏதேனும் ஒரு கைதி தன் பகுதி விட்டு வெளி சென்றாலோ அல்லது அருகில் இருக்கும் பகுதிக்கு சென்றாலோ கண்டறிய முடியும்.இதற்காக மாணவர்கள் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயை வென்றனர். மாணவர்களை, பேராசிரியரும் கணிப்பொறி மற்றும் வணிக அமைப்பு தலைவருமான பாலகிருஷ்ணன் வழிநடத்தினார்.
இதற்காக மாணவர்களையும், இத் துறையின் பேராசிரியர்களையும் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Views: - 0

0

0