ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா: ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

Author: Udhayakumar Raman
29 March 2021, 1:23 pm
Quick Share

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவின் 9ம் நாளான நேற்று முன் தினம் நம்பெருமாள் ரெங்க நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளினார். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து கோரதம் என்னும் பங்குனிதேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். பின்னர் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதனையடுத்து 4 வீதிகளிலும் தேர் பவனி வந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Views: - 96

0

0