2 முறை தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: 3வது முறையாக நேர்ந்த சோகம்
27 September 2020, 6:45 pmவிருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 முறை தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்த நிலையில் 3 வது முறையில் கிணற்றில் விழுந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆகாசப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருக்கு திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து 10 வருடங்களுக்கு மேல் ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவி பிரிந்த விரக்தியில் இருந்த தமிழ்ச்செல்வன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த கடந்த 2 முறை கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பொதுமக்கள் மீட்டதையடுத்து அவர் உயிர் பிழைத்தார். இந்நிலையில் இன்று மீண்டும் 3வது முறையாக ஆகாசம்பட்டி பகுதியில் உள்ள தோப்பில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்று உயிரிழந்தார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு காவல் துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.