ஸ்டாலின் சேவை செய்ய புயல் பாதித்த பகுதியை பார்வையிடவில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பேட்டி

26 November 2020, 8:45 pm
Quick Share

விருதுநகர்: ஸ்டாலின் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் புயல் பாதித்த பகுதியை பார்வையிடவில்லை தேர்தல் வரும் என்பதால் தேவை என்பதை கருத்தில் கொண்டு பார்வையிட்டுள்ளார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிய ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,” நிவர் புயல் தாக்குதலின்போது பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு கொட்டும் மழையிலும் மக்களை பாதுகாக்கும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பழனிசாமி உள்ளார். ஆவின் பால் புயல் பாதித்த பகுதிக்கு தங்கு தடையின்றி கிடைத்துள்ளது. பால் இல்லை என்ற பிரச்சனையே இல்லாமல் தங்கு தடையின்றி புயல் பாதித்த பகுதியில் கொடுத்து வருகிறோம்.

புயலை பொறுத்தமட்டில் வரும் முன் காப்போம் என்ற முறையில் எடப்பாடியார் எடுத்திருக்கும் நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகிறார்கள். ஸ்டாலின் பாதுகாப்பு கவசம் அணிந்து புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். ஸ்டாலின் அவர்கள் வேறு வழியின்றி முதல்வரை பார்த்து சம்பவ இடத்தைப் பார்வையிடுகிறார். பிறரைப் பார்த்து வரக்கூடிய தலைவர் அது சேவை கிடையாது. தானாக சேவை செய்ய வர வேண்டும்.

ஸ்டாலின் அவர்கள் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் புயல் பாதித்த பகுதியை பார்வையிட வில்லை தேர்தல் வரும் என்பதால் தேவை என்பதை கருத்தில் கொண்டு பார்வையிட்டுள்ளார். ஏழை எளிய மக்களுக்காக இருக்கக்கூடிய ஒரே ஆட்சியாக எடப்பாடி அவரின் ஆட்சி உள்ளது. இந்த ஆட்சியின் சிறப்புகளையும் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். யார் உண்மையாகவே வேலை செய்கிறார்கள் யார் நடிக்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கும் மக்ககள் சரியான நேரத்தில் சரியான பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 0

0

0