ஆசிரியர்களுக்கான மாநில ஆலோசனைக் கூட்டம்

By: Udayaraman
31 July 2021, 3:31 pm
Quick Share

திருச்சி: திருச்சி சிறுபான்மை தமிழ் வழி சுயநிதிப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் மாநில ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி செயின்ட்ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் அருட் சகோதரர் இருதயம் தலைமையில் சிறுபான்மை தமிழ் வழி சுயநிதிப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கோவிட்19 பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம், 1991 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட மற்றும் தரம் உயர்த்தப்பட்ட சுயநிதிப் பள்ளிகளுக்கு அரசின் நிதியுதவி பெறும் வழிமுறைகள் பற்றியும் கலந்தாலோசனை மற்றும்

தமிழ்நாடு தமிழ்வழியில் பயிற்றுவிக்கும் சுயநிதிப்பள்ளிகளுக்கு அரசின் நிதியுதவி பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக கத்தோலிக்க கல்விக் கழக செயலர் அருட்தந்தை போஸ்கோ, திருச்சி மறைமாவட்ட முதன்மைக்குரு அருட்தந்தை யூஜின், தமிழ்நாடு சுயநிதிப் பள்ளிகளின் நிர்வாகிகள் கூட்டமைப்பின் முஸ்தபா கமால் மாநில பொதுச் செயலாளர்கள் செபாஸ்டின் மற்றும் ஜேசுராஜ், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பள்ளிகளின் தாளாளர்கள், தலையாசிரியர்கள், மற்றும் பல்வேறு மாவட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Views: - 85

0

0