மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி: முதலிடத்தை பிடித்த அறந்தாங்கி அணி

1 February 2021, 1:21 pm
Quick Share

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் அறந்தாங்கி அணி முதலிடத்தை பிடித்து கோப்பையினை கைப்பற்றியது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை, திருச்சி, கோவை, செங்கல்பட்டு, தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டிணம், நெல்லை, இராமநாதபுரம், விருதுநகர்,பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அணிகள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடின.

இதில் அறந்தாங்கி அணி முதலாமிடத்தையும், பட்டுக்கோட்டைஅணி இரண்டாமிடத்தையும், நாகப்பட்டிணம்அணி மூன்றாமிடத்தையும், மதுரைஅணி நான்காவது இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் வெற்றிக் கோப்பையினை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பிணர்
ரெத்தினசபாபதி வழங்கினார்.போட்டிகளை அறந்தாங்கி கூடைப்பந்தாட்ட கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர் .

இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி கூடைப்பந்தாட்ட கழகத்தை சேர்ந்த பீர்சேக், சுப்பிரமணியன் தாயுமாணவன், பாரதிதாசன், காளிதாஸ், பாலு, சிவா, கார்த்திக், மணிகன்டன், குவின்டன், பிரசாந்த், நிவேதன், குமார், ஜெகதீஸ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0